மாரடைப்பின் அறிகுறிகள் | Symptoms of Heart Httack | Mr Doctor Tamil
மாரடைப்பின் அறிகுறிகள்..! | Symptoms of Heart Httack Mr.Doctor Tamil, அறிமுகம்(Introduction): மாரடைப்பு இன்றைக்கு மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ யாருக்கும் மிகத் தெளிவாக தெரிவது கிடையாது. மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். அதோடு நான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்கிறேன். துரித உணவுகளைச் சாப்பிடுவதில்லை என்று நீங்கள் சொன்னாலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக முதலுதவி கொடுக்க முடியும். இந்த மாரடைப்பில் இருக்கிற முக்கியப்பிரச்சனை: நமக்கு தற்போது ஏற்பட்டிருப்பது மாரடைப்பு தானா? இந்த நெஞ்சுவலி மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்பதில் குழப்பம் இருக்கும். முதலில் அவற்ற...