Posts

Showing posts from March, 2023

ஃப்ளூ காய்ச்சல் பரவலைத்தடுக்க என்ன செய்ய வேண்டும் |What to do to prevent the spread of the flu!

Image
ஃப்ளூ காய்ச்சல் பரவலைத்தடுக்க  என்ன    செய்ய வேண்டும்.! What to do to prevent the spread of the flu..! Mr.Doctor Tamil, ஃப்ளூ காய்ச்சல் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு தொடர்ந்து இருக்கும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவ குழு பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். குழந்தைகளுக்கு இப்போது காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவு அதிகமாக இருக்கிறதே ?  இது இயல்பு தானா ? இப்போது பருவகாலம் மாறத் தொடங்கியிருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானதுதான். சாதாரண வைரஸ் காய்ச்சலின் தாக்கம் 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். குழந்தைகளுக்கு இப்போது அதுதான் நடக்கிறது. சிலருக்கு மட்டும் 7 இல் இருந்து 10 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மருத்துவரிடம் சரியான சிகிச்சை மேற்கொண்டாலே இந்த காய்ச்சல் சரியாகி விடும். ஆனால் பெற்றோர்கள் பலரிடம் பயம் காணப்படுகிறதே? கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக குழந்தைகள் வீட்டிற்கு உள்ளேயே இருந்தார்கள். இப்போதுதான் பள்ளிக்கு செல்ல தொடங்கி உள்ளனர். ...