108 அவசர உதவி சேவை | 108 Emergency Assistance Service

108 அவசர உதவி சேவை

108 Emergency Assistance Service in tamil

அவசர கால சேவை:

Emergency service ;

Mr.Doctor Tamil

108 அவசர கால சேவையானது, தேவைப்படும் மருத்துவம், காவல் மற்றும் தீ போன்றவைகளில் ஏற்படும் அவசர தேவையை, 24 x 7 மணிநேரமும் செய்யும் ஒரு சேவையாகும். இந்த சேவையானது ஆந்திரம், குஜராத், உத்தர்கான்ட், கோவா, தமிழ்நாடு, இராஜஸ்தான், கர்நாடகம், அசாம், மேகாலயா மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் முழுவதுமாக செயல்பட்டுவருகிறது


இதன் முக்கிய அம்சங்களாவது

◆ இது ஒரு 24 x 7 மணி நேரமும் கிடைக்கக் கூடிய சேவை

◆ தொலைபேசி மற்றும் கைபேசி மூலம் கட்டணமில்லாத (டோல்ஃபிரி) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

◆ அவசரகால தேவையானது சராசரியாக 18 நிமிடங்களில் உங்களுக்கு கிடைக்கும்

◆ 108 எண்ணை கீழ்கண்ட தேவைகளுக்கு அழைக்கலாம்

◆ உயிரை காப்பாற்று வதற்கு  குற்றம் நடப்பதை அறிவிப்பதற்கு தீ விபத்து பற்றி அறிவிப்பதற்கு1 08 அவசர கால சேவையானது, சுமார் 6800 மருத்துவமனையிடம், முதல் 24 மணி நேர சிகிச்சையை இலவசமாக வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளது.


தேவைப்படும் உதவிகள்

◆ மருத்துவ அவசர உதவி

◆ காவல்துறையின் அவசர உதவி

◆ தீ விபத்தின் அவசர உதவி

◆ தீவிர காயம்

◆ திருட்டு, கொள்ளை

◆ தீ புண்

◆ இதய நோய்

◆ தெரு சண்டை

◆ தீ பிடித்தல்

◆ மாரடைப்பு

◆ சொத்து தகராறு

◆ தொழிற்சாலை தீ விபத்து

◆ சுவாச சம்மந்தமான ஆபத்து

◆ தற்கொலை முயற்சி

◆ நீரிழிவு நோய்

◆ திருட்டு

◆ தாய்/சிசு/குழந்தை பிரச்சினைகள்

◆ சண்டை

◆ காக்காய் வலிப்பு

◆ பொது தொல்லை

◆ சுயநினைவு இழத்தல்

◆ காணாமல் போவது

◆ விலங்கு கடி

◆ கடத்திச் செல்வது

◆உயர் காய்ச்சல்

◆ போக்குவரத்து பிரச்சினை (போக்குவரத்து நெரிசல், ஊர்வலம்)

◆ மிக அவசரமின்றி 108 எண்ணை அழைக்கக்கூடாது. இது தகவல் பெறுவதற்கோ, விசரணை செய்வதற்கான எண்ணோ அல்ல. விளையாட்டுக்காகவும் 108 எண்ணை டயல் செய்யக்கூடாது.

◆  இவ்வாறு செய்வதன் மூலம், மிக அவசரமாக தேவைப்படும் அழைப்புக்கு இணைப்பு கிடைக்காததால், உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

◆  தவறுதலாக 108 எண்ணை அழைத்து விட்டால் உடனே இணைப்பை துண்டிக்கவும்


இந்தியாவின் GVK EMRI – 108

ஆகஸ்டு 15, 2005-ல் ஹைதராபாத்தில் 108 அவசரகால சேவையை நிறுவி, இன்று GVK EMRI ஆந்திர மாநிலம் முழுவதும் 752 ஆம்புலன்ஸ் கொண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 4800 அவசரகால தேவைக்கான சேவையை புரிந்து வருகிறது.


GVK EMRI 108 சேவை ஆந்திரம் மற்றும் குஜராத்தில் சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து, உத்தரகாண்ட், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கோவா, அசாம், இராஜஸ்தான், கர்நாடகம், மேகாலயா மற்றும் பஞ்சாப் அரசுகள் தங்கள் மாநிலத்திலும் இது போன்ற சேவையை நிறுவ ஆர்வம் காட்டியுள்து.


தற்போது GVK EMRI சேவையானது ஆந்திரம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது.


பல்வேறு மாநிலத்திற்கான ஆம்புலன்ஸ்

ஆந்திரம் - 752

குஜராத் - 403

உத்தர்காண்ட் - 108

இராஜஸ்தான் - 164

தமிழ்நாடு - 385

கோவா - 18

கர்நாடகம் - 408

8 அசாம் - 280

மேகாலயா - 29

மத்திய பிரதேசம் - 55

அவசர காலத்தில் உதவும் தன்னார்வாளர்கள்

GVK EMRI-யின் தன்னார்வமே எல்லா அவசர கால தேவைக்கும் தொண்டு புரிய செய்கிறது. 108 சேவைப்பற்றிய அறிவையும் மற்றும் தகவலையும் பரப்புவதற்கு, தன்னார்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். பின் வருபவற்றில் அவர்கள் உதவி செய்யலாம்


தொலைபேசி வசதி இல்லாதவர்களின் அவசரகால தேவையை தெரிவிப்பதற்கு

ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிதல்

யார் என்று அறியபடாதவர்களுக்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உடன் இருப்பது அவர்களுக்காக கையொப்பம் இடுதல்

பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வரும் இடத்திற்கு கொண்டு செல்லுதல் அல்லது ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லையென்றாலோ அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தாலோ, பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல்

GVK EMRI-யின் எதிர்ப்பார்ப்புகள்

முதல் உதவியாளராக மருத்துவமனைக்கு முன்னான அக்கரையை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தல். உதாரணத்திற்கு உதவி செய்யும் தன்னார்வாளர்கள் மருத்துவராக இருப்பின், ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வருவதற்கு முன் கவனம் செலுத்துதல்

உதவி புரிபவராக; பாதிக்கப்பட்டவருக்கு துணையாக ஆம்புலன்ஸ்/ மருத்துவமணையில் இருத்தல்

வாகன ஓட்டுனராக; GVK EMRI–யின் அலுவலர் கிடைக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்டவரை வாகனம் மூலம் கொண்டுவருதல்

வாகன பழுது நீக்குபவராக; GVK EMRI–யின் வாகனங்களில் சிறிய மற்றும் பெரிய பழுது பார்த்து வாகனங்களை தேவையான நேரங்களில் கிடைக்கச் செய்தல்

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC) வேலூர் Christian Medical College (CMC) Vellore

தமிழ்நாட்டின் சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் | The best government medical colleges in Tamil Nadu

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் Sri Ramachandra Medical College and Research Institute